ஆன்மிகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/religious/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 23 Jan 2024 17:04:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 ஆன்மிகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/religious/ 32 32 201197430 அயோத்தி ராமர் கோயிலில் 2.5 லட்சம் பக்தர்கள் இன்று தரிசனம்! https://koodal.com/news/2024/01/23/2-5-lakh-devotees-have-darshan-at-ayodhya-ram-temple-today/ Tue, 23 Jan 2024 17:04:58 +0000 https://koodal.com/?p=47356 அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை இன்று 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக…

The post அயோத்தி ராமர் கோயிலில் 2.5 லட்சம் பக்தர்கள் இன்று தரிசனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை இன்று 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 8,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை இன்று செவ்வாய்கிழமை சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், இதேபோன்ற எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதாகவும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அயோத்தி ராமர் கோயிலில் 2.5 லட்சம் பக்தர்கள் இன்று தரிசனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
47356
நான் இன்னும் சாகவில்லை!: நித்யானந்தா https://koodal.com/news/2022/05/12/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8/ Thu, 12 May 2022 07:47:19 +0000 https://koodal.com/?p=2806 கைலாச தீவில் தங்கி இருப்பதாக கூறும் பிரபல சாமியார் நிதியானந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் இன்னும் சாகவில்லை என அவர் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில்…

The post நான் இன்னும் சாகவில்லை!: நித்யானந்தா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கைலாச தீவில் தங்கி இருப்பதாக கூறும் பிரபல சாமியார் நிதியானந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் இன்னும் சாகவில்லை என அவர் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கியதை அடுத்து அடுத்தடுத்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரம் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அதன் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நித்யானந்தாவுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் இன்னும் மரணம் அடையவில்லை என அவர் கைப்பட எழுதிய கடிதமும் புகைப்படங்கள் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:-

பரமசிவனின் ஆசிகள்! என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம். சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். இதுவரை என்னை சுற்றியுள்ள, மக்கள், அவர்களது பெயர்கள், ஊர்கள், மற்றும் நினைவுகள் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

இன்னும் கைலாசத்தின் அதிர்வுகள் மனநிலையில் அதிகமாக உள்ளது. சந்தேகிப்பவர்கள், புகைப்படங்கள் போலியானவை என நீங்கள் உணர்ந்தாலும், திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள், நீங்கள் என்னைத் தெளிவாகப் பார்ப்பீர்கள். என்னைக் கண்காணித்து, ஆதரவு தந்து, உதவி செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. இன்னும் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் போன்றவர்கள். மனித உடல் மற்றும் மனதின் மீது சூப்பர் நனவின் தாக்கத்தைப் படிப்பதில் என்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.

எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் தவறாமல் நடக்கிறது, ஆனால் இன்னும் சாப்பிடுவதும் தூங்குவதும் தொடங்கவில்லை. நித்ய பூஜைக்காக நான் சமாதியிலிருந்து வரும்போது மட்டும், ​​சில சமயங்களில் உங்கள் கருத்துகளைப் பார்த்து என் பதிலைத் தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி, நலம் பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை. இது உடலின் வழியாகச் செயல்படும் ஒரு காஸ்மோஸ் போன்றது. மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் இன்னும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை.

பரமசிவனின் இணையான பிரபஞ்சங்களை அனுபவிப்பதுதான் இது. பரமசிவன் இந்த உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு ஒரு ஸ்பீக்கர் அல்லது லவுட் ஸ்பீக்கராக என்னைப் பயன்படுத்துவதைப் போல் உணர்கிறேன். மனிதனாக இங்கு இருப்பதை விட கைலாசத்தில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். ஆனால் உங்கள் அனைவரிடமும் உள்ள அன்பு, என்னை இங்கு அழைத்து வந்து உங்களுடன் நேரம் செலவிட வைக்கிறது. என் பக்தர்களுக்கு சமாதி தோன்றும், பார்வை தரும், குணப்படுத்தும், பதிலளிக்கும். அது உடலை பயன்படுத்தி பதில் அளிப்பதைவிட, விரல்களால் டைப் செய்வதை விட எளிதாக இருக்கிறது. மேலும் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள். மகிழுங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள்!, என பதிவிட்டுள்ளார்.

The post நான் இன்னும் சாகவில்லை!: நித்யானந்தா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2806
கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஆதீனம் https://koodal.com/news/2022/05/09/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ Mon, 09 May 2022 12:14:13 +0000 https://koodal.com/?p=2477 தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் கூறினார். தருமபுர ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை…

The post கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஆதீனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் கூறினார்.

தருமபுர ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை ஆதீனம் மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

திருவையாறு நந்தி பெருமானின் 16 திருமுறைகளில் ‘ஆடும் பல்லக்கு’ இடம்பெற்று உள்ளது. இது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். இதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமய சம்பிரதாய கடமைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்வர் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு தடை விதிக்க, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உந்துசக்தியாக இருந்தார். இதன் காரணமாகவே தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு நிகழ்வு உலக அளவில் பரவியது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நடந்தது நடந்து விட்டது. இனி நடப்பது நல்லதாக அமைய வேண்டும். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு சேவைக்கு ஜியர் சுவாமிகள் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சைவம், வைணவம் பேதமின்றி அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சி தருகிறது.

எனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதற்கு அரசியல் பின்புலமும் உள்ளது. ‘இது யாருக்கும் அடிபணியாத அரசு’ என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். எனவே அடுத்த ஆண்டு தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நடக்குமா? என்பது பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

‘நான் தருமபுரம் கோவிலுக்கு வரக்கூடாது’ என்று மிரட்டுகிறார்கள். இதனை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். எனக்கு கோவில்களில் அன்னதானம் வழங்க திரைமறைவில் தடை விதிக்கப்படுகிறது. எங்களுக்கு கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை.

தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறேன். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பற்றி அப்போது பேசலாம்.

சன்னியாசிகள் மத சடங்குகளை பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடக்கிறார்களா? என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறியதாக செய்தி தாளில் படித்தேன். நான் ஓட்டல்களில் சாப்பிடுவது இல்லை. சமைத்து தான் சாப்பிடுகிறேன். நான் கோவில் கோவிலாக பாதயாத்திரை போனவன் தான். கம்யூனிஸ்டுகள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக நான் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ‘இது ஆன்மீக அரசு’ என்று தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார். அது அவருடைய கருத்து. நான் இந்த விஷயத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஆதீனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2477
மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம் https://koodal.com/news/2022/05/08/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/ Sun, 08 May 2022 09:33:57 +0000 https://koodal.com/?p=2340 மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் நடுப்பிடாகை, முத்து மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று…

The post மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மதுரை ஆதீனம்
கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் நடுப்பிடாகை, முத்து மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட மதுரை ஆதினம் 293வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். இதன் பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாக சொல்கிறீர்கள். நாஞ்சில் சம்பத் யாருக்கு சாமரம் வீசுகிறார். முதலில் அவர் எந்த கட்சியில் இருந்தார்? அடுத்து எங்கே போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? நான் இறைவனுக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். தருமபுரம் ஆதீனத்தை தூக்கி செல்வதை தடை செய்தார்கள். போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கி செல்வது, இஸ்லாமியர்கள் அவர்களது சமயம் சார்ந்த சடங்குகளுக்கு பல்லக்கு தூக்குவது பற்றி எல்லாம் அவர் பேசுவாரா?

ஆன்மிகமும் அரசியலும் ஒன்று தான். கோயிலில் அரசாங்கம் தானே இருக்கிறது. அரசியல்வாதிகள் தானே அறநிலையத்துறை அமைச்சர் ஆகிறார்கள். சர்ச், பள்ளிவாசல் போன்றவற்றில் அரசு தலையிடுவது இல்லை. கோயிலில் மட்டுமே தலையிடுவதால் அரசியலும், ஆன்மிகமும் ஒன்று தான். நேரம் வரும்போது இந்திய பிரதமரை சந்திப்பேன். இவர்கள் ஓவராக சென்றால் பிரதமரை சந்திக்க வேண்டியது தான். எனக்கு டெலிபோனில் தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர்.

கோயிலுக்கு போகிறேன் என சொன்னதும், ‘ஆதீனம் இங்கு வர முடியுமா? இங்கு இருக்கும் சுவரை கூட தொட நாங்கள் விடமாட்டோம். திருப்பணியையும் செய்ய விடமாட்டோம்’ என்று கூறினர். அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஆன்மிகவாதி பேசக்கூடாதா? தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால் தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நான் உட்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது. பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பது நல்லது. மேலும் பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

The post மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2340
மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! https://koodal.com/news/2022/05/05/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/ Thu, 05 May 2022 17:13:38 +0000 https://koodal.com/?p=1993 மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! தமிழ்நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போவதாக அறிவித்த மதுரை ஆதீனத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வக்கீல்கள் மதுரை காவல் ஆணையரிடம் மனு…

The post மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழ்நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போவதாக அறிவித்த மதுரை ஆதீனத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வக்கீல்கள் மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினையும் மதுரை ஆதீனம் நேற்று பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள். உன்னால் திருப்பணி செய்ய முடியுமா? ஊருக்குள் நுழைய முடியுமா? என ஆளும் கட்சியினர் கேட்கிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன். பட்டினப் பிரவேசத்துக்கு ஆதரவு பாரம்பரியம் மிக்க பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. நான் இப்படி பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தருமபுர ஆதீனம்தான். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வர் வந்து நடத்த வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன். 500ஆண்டு காலமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆங்கிலேயர் காலத்திலும் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் நடந்தது. முதல்வராக கருணாநிதி இருந்த போதும் பட்டினப்பிரவேசமும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன்.” என்றார்.

இந்த நிலையில், மதுரையில் வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன், நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு ஆகிய வழக்கறிஞர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஆதீனத்திற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர். அதில், “மதுரை ஆதினமடம் 293 ஆண்டுகாலம் பாரம்பாரியம் மிக்கது. திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமீபத்தில் அவரது உயிருக்கும் ஆதின மடத்திற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்து விரோத சக்திகள் எந்த நேரமும் மதுரை ஆதினகர்த்தா மீதும் மடத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக இன்று காலையில் ஆதினம் அவர்களை நேரில் சந்தித்து நிலவரம் அறிந்தோம். அவரும் உரிய பாதுகாப்பு கேட்டு பேட்டி அளித்துள்ளார். ஆகவே மதுரை ஆதினத்திற்கும், ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளித்து பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தை பாதுகாக்க பொதுநலன் கருதி கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற மதுரை ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.

The post மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1993
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி https://koodal.com/news/religious/2022/04/16/at-least-2-people-have-been-killed-in-a-stampede-at-the-madurai-kallazhagar-chithirai-festival/ Sat, 16 Apr 2022 05:01:20 +0000 https://koodal.com/?p=802 மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு பெண் ஆகிய இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு…

The post கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு பெண் ஆகிய இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கியபோது ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்த நபர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
802
2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் https://koodal.com/news/tamilnadu/2022/04/14/madurai-chithirai-festival-meenakshi-sundareswarar-wedding-held-after-2-years-with-the-participation-of-devotees/ Thu, 14 Apr 2022 10:04:52 +0000 https://koodal.com/?p=761 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா…

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
சித்திரை திருவிழாவில் பங்கேற்க மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளும் மதுரை சித்திரை திருவிழாகளை இழந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்தரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விழா தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. கோவிலில் உள்ள வடக்குமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார். ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ணவண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ரூ.500 கட்டணச் சீட்டில் 2,500 பேர், ரூ.200 கட்டண சீட்டில் 3,500 பேர் என 6 ஆயிரம் பேர் கட்டண அடிப்படையிலும், 6 ஆயிரம் பக்தர்கள் இலவச அனுமதி அடிப்படையிலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 3000 பேர் என மொத்தம் 15 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர். அவர்கள் காலை 7 மணிமுதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இலவச அனுமதி பெற்றவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கட்டண சீட்டு வாங்கியவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று கோவிலுக்குள் சென்றனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாகவும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் வளாகம் மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக அழகர் மலையிலிருந்து அழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் தேரோட்டம் மற்றும் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
761
மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார் https://koodal.com/news/religious/2022/04/13/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/ Wed, 13 Apr 2022 11:13:03 +0000 https://koodal.com/?p=700 மீனாட்சி அம்மனுக்கு நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில்தான் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம்…

The post மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மீனாட்சி அம்மனுக்கு நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில்தான் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு கோவிலை அடைந்தனர். அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும் வகையில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா, அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது.

முதலில் காப்பு கட்டிய விக்ரம் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். அப்போது இரவு 8.30 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்பு மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார். அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர்.

மதுரையில் நேற்று மீனாட்சியை பட்டாபிஷேக திருக்கோலத்தில் காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதன் மூலம் மதுரையில் நேற்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது. பட்டத்து அரசியான மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் திருவிளையாடலை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (14-ந் தேதி) மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை நகரமும், கோவிலை சுற்றி உள்ள வீதிகளும் விழாக்கோலம் பூண்டு உள்ளன.

திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கானோர் நேரில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் தரிசன கட்டண டிக்கெட் பெற்ற 6 ஆயிரம் பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், மற்ற பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். தற்போது விழா வழக்கம் போல் விமரிசையாக நடந்து வருவதால் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. நாளை, மாலையில் கள்ளழகர் மதுரை புறப்பாடும், அதற்கு மறுநாள் எதிர்சேவையும், 16-ந் தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

The post மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
700