அழகு குறிப்புகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/beauty-tips/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Mon, 14 Nov 2022 10:29:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 அழகு குறிப்புகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/beauty-tips/ 32 32 201197430 முகப்பருவிலிருந்து விடுதலை பெற.. https://koodal.com/women/2022/11/14/beauty-tips-to-get-rid-of-pimples-beauty-care-and-tips-in-tamil/ Mon, 14 Nov 2022 10:29:24 +0000 https://koodal.com/?p=16693 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது. அத்தகையவர்களுக்குப் பருக்களைப் போக்க சில யோசனைகள்: உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம்…

The post முகப்பருவிலிருந்து விடுதலை பெற.. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது. அத்தகையவர்களுக்குப் பருக்களைப் போக்க சில யோசனைகள்:

உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு
பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.

பருக்களைப் போக்குகிறோம் என்று கடையில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.

கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.

குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.

வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது நல்லது. உங்கள் தோலுக்கு உகந்த பேஷியல் கிரீம் எதுவென்று டாக்டரிடம் விசாரித்து அதைப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.

மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.

கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

The post முகப்பருவிலிருந்து விடுதலை பெற.. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16693
மினுமினுப்பான கழுத்துக்கு.. https://koodal.com/women/2022/11/14/skin-care-tips-for-a-discoloured-neck-beauty-care-and-tips-in-tamil/ Mon, 14 Nov 2022 09:56:57 +0000 https://koodal.com/?p=16690 சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. அதற்கு சில டிப்ஸ்: *…

The post மினுமினுப்பான கழுத்துக்கு.. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

அதற்கு சில டிப்ஸ்:

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.

The post மினுமினுப்பான கழுத்துக்கு.. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16690
குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்! https://koodal.com/women/2022/11/14/winter-beauty-tips-beauty-care-and-tips-in-tamil/ Mon, 14 Nov 2022 09:42:49 +0000 https://koodal.com/?p=16687 குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில…

The post குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ..

கூந்தல் பராமரிப்பு :

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகைச் சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில் கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதைத் தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங் ஆகியவற்றால் கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால் அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

கூந்தலில் இயற்கையான ‘டைகள்’ பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலைக் காப்பாற்ற, ‘சில்க் பேப்ரிக்’ துணிகளைப் பயன்படுத்தலாம்.

சருமப் பராமரிப்பு:

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்­ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கானத் தண்ணீ­ரை வழங்குகின்றன.

குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றைப் பராமரிக்க, சோப்பிற்குப் பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தலாம்.

தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க, குளிக்கச் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயைத் தேய்க்கலாம்.

குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.

குளிக்கப் பயன்படுத்தும் தண்­ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.

குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்குப் பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

The post குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16687
முடி கொட்டுவது இயல்பானதா? https://koodal.com/women/2022/10/20/tips-to-control-hair-fall-beauty-care-and-tips-in-tamil/ Thu, 20 Oct 2022 10:16:50 +0000 https://koodal.com/?p=14990 முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின்…

The post முடி கொட்டுவது இயல்பானதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

இந்நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.

முடி கொட்டுவது இயல்பானதா?

தலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும். ஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க முடியும்.

முடி கொட்டக் காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.

முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை என்ன?

காரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும்.

முடி கொட்டுவதைத் தடுக்கவும், வழுக்கையை தாமதப்படுத்தவும் ஒளிக் கதிர் சிகிச்சை முறை உள்ளது. இந்த ஒளிக் கதிர் சிகிச்சையை 20 முதல் 30 நிமிஷம் அளிக்க வேண்டும். முடி கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர நிவாரணம் பெற மொத்தம் எட்டு முதல் 20 தடவை சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

The post முடி கொட்டுவது இயல்பானதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
14990
‘குளிர்காலம்..’ வறண்ட சருமக்காரர்கள் உஷார்! https://koodal.com/women/2022/10/20/treating-dry-skin-in-winter-beauty-care-and-tips-in-tamil/ Thu, 20 Oct 2022 10:04:50 +0000 https://koodal.com/?p=14987 இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம். முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட…

The post ‘குளிர்காலம்..’ வறண்ட சருமக்காரர்கள் உஷார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம். முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டு போகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் “சிக்”கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

The post ‘குளிர்காலம்..’ வறண்ட சருமக்காரர்கள் உஷார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
14987
‘அழகு’ நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல! https://koodal.com/women/2022/10/20/real-beauty-does-not-depend-on-colour-beauty-care-and-tips-in-tamil/ Thu, 20 Oct 2022 09:44:54 +0000 https://koodal.com/?p=14984 இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும். அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம். ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும்…

The post ‘அழகு’ நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும். அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம். ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகு படுத்திக்கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.

அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.

சிலருக்கு பலஹீனத்தாலும், ஈரல், இருதயம், குடல் பாதிப்புகளாலும் இம்மாதிரியான அலர்ஜி உருவாகலாம். முகத்தின் சருமம் மிகவும் மென்மையானது. அதனாலேயே எந்த ஒரு நோயும் முதலில் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மனிதனின் அகத்தை மட்டுமல்ல, நோயையும்கூட முகத்தில் பார்த்து விடலாம்.

இப்படி வெளிப்புறத்தாலும், உட்புறத்தாலும் ஏற்படும் பாதிப்பால் உண்டான தோல் அலர்ஜி நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இருவகையான மருந்துகளைக் கொடுப்பார்கள். ஒன்று மேற்பூச்சு மருந்துகள், மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள். அப்படி மருந்துகளைச் சாப்பிடும்போதோ அல்லது பூசும்போதோ பாதிக்கப்பட்ட உறுப்புகள் குணமாகும். தோலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

மங்கு:

சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப்படையும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டாகும். இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை..

கோக்டம் – 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு – முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

சருமம் பளபளக்க:

பச்சைப் பயறு – 250 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
வசம்பு – 10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

The post ‘அழகு’ நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
14984
‘கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்! https://koodal.com/women/2022/09/28/beauty-tips-for-a-thick-and-long-black-hair-growth-beauty-care-and-tips-in-tamil/ Wed, 28 Sep 2022 09:26:25 +0000 https://koodal.com/?p=13515 கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா.. அடர்த்தியா.. கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்.. * வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால்…

The post ‘கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா.. அடர்த்தியா.. கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்..

* வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.

* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக ‘மசாஜ்’ செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.

* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமான விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:

* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

– சுஜீதா செந்தில்குமார்

The post ‘கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
13515
கோடைக்கால அழகுப் பராமரிப்பு! https://koodal.com/women/2022/09/28/summer-skin-care-tips-beauty-care-and-tips-in-tamil/ Wed, 28 Sep 2022 08:39:21 +0000 https://koodal.com/?p=13512 நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப்…

The post கோடைக்கால அழகுப் பராமரிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம்.

நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் (Melanin pigments) உள்ளது. அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள். ஆனால் நிறம் குறைந்தவர்களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயிலினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும். இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது.

வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம்.

வியர்வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும். ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் (Anti bacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம்.

சிகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத் தொல்லை இராது. முட்டையின் வெண் கருவைத் தலையில் தேய்த்து, சிறிது நேரத்தில் அலசலாம். எதை உபயோகப்படுத்தினாலும் தலையை நீர் கொண்டு சரியாக அலசவில்லையெனில் பொடுகு அதிகரித்துவிடும்.

வால் மிளகைப் பாலில் ஊறவைத்து அரைக்கவும். தலையில் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையை ஒரு ஒரு பாகமாகப் பிரித்து அந்த இடத்தில் அரைத்த கலவையைத் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். (லேசாக எரிச்சல் கொடுக்கும்) பின்பு தரமான சிகைக்காய்ப் பொடி, அல்லது ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். (வசம்பிற்கு தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உண்டு)

கண்களுக்கு!

உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

சருமப் பராமரிப்பு

எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிகமாகிவிடும். அவர்கள் சாதாரண சோப்பை உபயோகப்படுத்தினால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் (fatty acid) எண்ணெய் சருமத்தில் சேரும் பொழுது பிரச்சினையாகி விடும். அவர்கள் எண்ணெய் விலக்கப்பட்ட சோப் வகைகளைப் (Oil free soap) பயன்படுத்த வேண்டும். இதேபோல் Soap free face wash உண்டு. அதைப் பயன்படுத்தினால் ஃப்ரெஷ் ஆக உணரலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கென்றே பிரத்யேகமாக எண்ணெய் விலக்கப்பட்ட க்ளன்சர், டோனர், மாய்சரைசர் உண்டு. அவற்றை உபயோகப்படுத்தி எண்ணெய் சருமத்தை உடையவர்கள் நல்லவிதமாகப் பாதுகாக்கலாம்.

சருமப் பாதுகாப்பிற்கான டிப்ஸ்:

வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு (1 டீ ஸ்பூன் சாறு) அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். (இரண்டாம் முறை உபயோகப்படுத்தியதாக இருக்கலாம். அல்லது லைட்டான டிகாஷனாக இருக்கலாம்.) முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.

குளிக்கும் பொழுது:

வியர்வை நாற்றம் போக, குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

ஒரு வாளி தண்­ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும்.

முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்).

கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.

– அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

The post கோடைக்கால அழகுப் பராமரிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
13512
நச்சென்ற அழகுடன் திகழணுமா? https://koodal.com/women/2022/09/06/simple-beauty-tips-beauty-care-and-tips-in-tamil/ Tue, 06 Sep 2022 10:18:14 +0000 https://koodal.com/?p=12156 அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய…

The post நச்சென்ற அழகுடன் திகழணுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய டிப்ஸஸ்தான் கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்.. மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!

* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.

* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.

* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.

* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.

* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.

* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.

* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.

* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.

* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.

* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.

* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.

* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.

* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.

* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.

* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.

* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.

* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.

* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.

* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.

* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.

The post நச்சென்ற அழகுடன் திகழணுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12156
மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு https://koodal.com/women/2022/09/06/beauty-tips-for-monsoon-beauty-care-and-tips-in-tamil/ Tue, 06 Sep 2022 10:03:29 +0000 https://koodal.com/?p=12153 மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.…

The post மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதேபோல் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி மசாஜ் செய்து கொண்டால் மழைநாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.

தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்­ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.

ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

மழைக்காலத்தில் மருதாணி போட்டுக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடித்துவிட வாய்ப்புண்டு.

The post மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12153