சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-02 & எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஓஎஸ் – 2 மற்றும் ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாந்தது. இதில் இ.ஓ.எஸ் – 2 செயற்கைக்கோள் 145 கிலோ எடை கொண்டது, இது பூமியை கண்காணிக்கும் பணிகளை செய்யக்கூடியது. இதேபோல் 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோள் சுமார் 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவியர்களால் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளால், சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் வடிவமைக்கப்பட்டதாகும்.

ராக்கெட் தோல்வி குறித்து குழு அமைக்கப்படடு ஆராயப்படும் எனவும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.