சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.