மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து பெற்றார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் , தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உள்ளாட்சி அமைப்புகளின் தாங்களின் தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளும் அமைப்பாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம அளவில் கிராம ஊராட்சிகள் என பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளில் சாலை வசதி, குடிதண்ணிர், தெருவிளக்கு, சுகாதாரம், கல்வி, நூலகம், துப்புரவு, பூங்கா, பதாள சாக்கடை போன்ற பராமரிப்பு பணிகளை செய்கின்றன. கிராம சபை கூடி வரவு செலவு – திட்டம் பற்றி விவாத்தல். மத்திய,மாநில நிதிப்பெற திட்டம் தாயரித்தல் உள்ளிட்ட பணிகளையும் பஞ்சாயத் ராஜ் மேற்கொள்கிறது.