திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது:-
திருக்குறள் ஆன்மிகத்தை கற்பிக்கிறது. அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல் தான் திருக்குறள். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு சிலர் திருக்குறளை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.
திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. தமிழ் புத்தகங்கள் பல மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டதால் எளிதாக தமிழ் கற்றுக்கொள்ள முடிகிறது. இருப்பினும், திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம். இவ்வாறு அவர் பேசினார்.