தற்போது மத்தியில் பா.ஜ., ஆட்சி நடப்பதால், எதிர்க்கட்சிகள் வீட்டிற்கு விசாரணை அமைப்புகள் வருகின்றன. நாளை ஆட்சியில் இல்லாத போது அந்த அமைப்புகள் பா.ஜ.,வினர் வீட்டிற்கு விரைவில் வரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
பா.ஜ., அதிகாரத்தில் இருப்பதால், விசாரணை அமைப்புகளை கொண்டு மிரட்டுகிறீர்கள். நாளை நீங்கள் ஆட்சியில் இல்லாத போது, இந்த விசாரணை அமைப்புகள் உங்கள் வீட்டிற்கு வந்து, காதை பிடித்து வெளியே இழுத்து வரும். இந்த நாள் விரைவில் வெளியே வரும். துர்கா பூஜை அன்று, மஹாத்மா காந்தி சிலையானது அசுரன் போன்று காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களுக்கு பொது மக்கள் பதிலளிப்பார்கள். இதனால் ஏமாற்றம் அடைந்த நான், விரதம் இருந்ததால் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.