இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 38-ஆவது நாளாக, கா்நாடகத்தில் 15-ஆவது நாளாக இன்று சனிக்கிழமை பயணித்தது. இதனிடையே பல்லாரியில் நேற்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:-
பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டை துண்டாடுவதாக ஆயிரக்கணக்கான மக்கள் கருதுவதால் இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ யாத்ரா என்று பெயரிட்டோம். இன்று இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பிரதமர் கூறியிருந்தார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக, கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். கர்நாடகத்தில் பாஜக அரசு எஸ்சி மற்றும் எஸ்டிக்கு எதிரானது இவ்வாறு அவர் கூறினார்.