2024 தேர்தலுக்குள் போக வேண்டியிருக்கு. அதற்குள் நாம் தயாராகிவிட வேண்டும்: சீமான்

மற்றவர்களுக்கெல்லாம்தான் தேர்தல் என்பது கட்சி சம்பந்தப்பட்டது. நமக்கு அப்படியில்லை, அது ஒரு போர்.. அநீதி, அக்கிரமம், ஊழல், லஞ்சம், போதை., சாதீய இழிவு தீண்டாமை, இவைகளுக்கு எதிரான புரட்சிகர போர் என்று சீமான் கூறினார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி நாம் தமிழர் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

ஐயா ஸ்டாலின், ஆட்சிக்கு வந்துட்டு தூக்கம் வரலேன்னு சொல்றாரு.. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது.. அவராச்சும் சொல்லிட்டாரு.. என்னால சொல்ல முடியல.. ஒற்றுமையா இணைந்து வேலை பார்க்கணும்.. மனக்கசப்பு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. பிணக்கமாகவும், இணக்கமாகவும் இணைந்து பணியாற்ற வேண்டும்.. நாம பணியாற்றுவதை பார்த்து, பிற பிள்ளைகள் ஓடிவந்து நம்ம கட்சியில் சேர ஆர்வம் காட்டணும்.. அனைவரயும் நேசித்து வழிநடத்த வேண்டும்.

“ஒரு இனிய சொல் இரும்பு கதவையும் திறக்கும்”. நீங்க வாயில் இருந்து எந்த வார்த்தையையும் பேசாதீங்க, இதயத்தில் இருந்து ஒவ்வொரு சொல்லையும் எடுத்து பேசுங்கள் என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.. வாயிலிருந்து நாம் பேசும் வார்த்தை, காதுக்குள் வரைக்குள்தான் போகும். ஆனால், இதயத்தில் இருந்து பேசும் வார்த்தைகள் காதுக்குள் நுழைந்து, மூளைக்கு சென்று செயல்பட துவங்கும் என்கிறார். என் உறவுகளும் அப்படி பேசி பழக வேண்டும்.

முதன்முதலில் கட்சி ஆரம்பிக்கும்போது, ஒவ்வொரு ஊராக சென்றேன்.. ஒவ்வொரு ஊரையும் பேசி பேசியே சரிசெய்து வந்தேன். அதுமாதிரி இப்பவும் போக வேண்டி இருக்கு. 2024 தேர்தலுக்குள் போக வேண்டியிருக்கு. அதற்குள் நாம் தயாராகிவிட வேண்டும். மற்றவர்களுக்கெல்லாம்தான் தேர்தல் என்பது கட்சி சம்பந்தப்பட்டது. நமக்கு அப்படியில்லை, அது ஒரு போர்.. அநீதி, அக்கிரமம், ஊழல், லஞ்சம், போதை., சாதீய இழிவு தீண்டாமை, இவைகளுக்கு எதிரான புரட்சிகர போர். இவ்வாறு அவர் பேசினார்.