தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கசாவடி அருகே நள்ளிரவில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 2 பேர் கைது.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாளையம் சுங்க சாவடியில் நேற்று நள்ளிரவு திடிர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தருமபுரி, சேலம் வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் கடத்தி வந்த 3.2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த கோபலகிருஷ்ணன் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்ராவ் ஆகிய இருவரை மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து. இவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ததில் முதற்கட்டமாக ராமநாதபுரத்திற்கு கடத்தி வந்தது தெரிய வருகிறது. ராமநாதபுரத்திலிருந்து எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது யாரிடம் வாங்கி வந்தது என குறித்து விசாரணை நடந்து வருகிறது.