வாழ்த்துக்கள் : நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

நடிகை அமலா பாலுக்கு 10 ஆண்டுகளுக்கான சிறப்பு கோல்டன் விசாவை, துபாய் அரசு – ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நடிகை அமலா பால், இந்த கெளரவத்தை பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.

பார்த்திபன், சஞ்சய் தத், மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நடிகை ஊர்வசி ரவுதேலா, மீரா ஜாஸ்மின், பிரபல பின்னணிப் பாடகி சித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.