பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கையில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஸ் சோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். உள்நோக்கத்துடன் சிபிஐ சோதனை நடத்துவதாக ஆம்ஆத்மி கட்சியின் குற்றம்சாட்டினர்.
மேலும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விஜய் நாயர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமித் அரோரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது புதிய மதுபான கொள்கையில் ஆம்ஆத்மி தலைவர்கள் லாபம் சம்பாதிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் “சவுத் குரூப்” என்ற தொழிலதிபர்களின் குழு பற்றிய தகவல் கிடைத்தது. சவும் குரூப் எனும் குழு சார்பில் முதலில் 100 கோடி ரூபாய் கொடுத்து அனுப்பபப்பட்டதாகவும், இந்த சவுத் குரூப்பை கவிதா, சரத் ரெட்டி, மகுந்தா ஸ்ரீனிவாசலு ரெட்டி என்பவர் கட்டுப்படுத்துவதாகவும் தகவல் கிடைத்தது. இதில் கவிதா என்பவர் தெலங்கான முதலமைச்சர் சந்திர சேகரராவின் மகள் என்பது தெரியவந்தது. இதனால் டெல்லி மதுபான ஊழலில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார். கவிதா தற்போது தெலங்கானாவில் எம்எல்சியாக உள்ள நிலையில் அவரும் இந்த வழக்கில் இணைக்கப்ட்டுள்ளார்.
இந்நிலையில் தான் டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு சிபிஐ சார்பில் கவிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் கவிதா ஹைதரபாத் அல்லது டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
தெலங்கானாவில் சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக சந்திர சேகரராவ் உள்ளார். இவருக்கும், மத்திய பாஜக அரசுக்கும் கடும் மோதல் போக்கு உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் சந்திரசேகரராவ் பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் தேசிய கட்சியை துவங்கி உள்ளார். இந்நிலையில் தான் அவரது மகள் கவிதாவுக்கு டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் வழங்கி உள்ளது.