எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் அதிமுக – அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-
அம்மா மறைந்த நன்நாளில் என்று உறுதி மொழி ஏற்றதில் இருந்தே அவர்களது மனநிலை தெரிகிறது. அவர்கள் யார் என்பது அம்மா நினைவு நாளில் வெளிப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அழைப்பிதழ் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும். நான் அமமுக பொதுச் செயலாளர், இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன். அதிமுகவில் உள்ளவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டேன்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கூட்டணிக்கு செல்வீர்களா என்பது காலத்தின் கட்டாயம். கூட்டணிக்கு யார் தலைமை என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முதலில் அவர் நிதானமாக உள்ளாரா என்பதனை பரிசோதிக்க வேண்டு. அமமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவி அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்படும் அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.