பணமோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு ஜாமீன்!

தேசிய பங்குச் சந்தையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை நீதிபதி ஜஸ்மீத் சிங் அவருக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 2009 மற்றும் 2017-க்கு இடையில் தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பது தொடர்பான பணமோசடி தடுப்புவழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்தாண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக என்எஸ்இயின் முன்னாள் தலைவர்கள் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன் மற்றும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் பாண்டே ஆகியோர் ஜூலை மாதம் மத்திய பணமோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சஞ்சய் பாண்டேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.