தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,05,261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 6,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,765 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 294 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், இன்று ஒரே நாளில் 397 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 73 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், திருவள்ளூரில் 35 பேருக்கும், திருப்பூரில் 28 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,46,890 ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 608 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,03,196 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நோய் தொற்றை தாமதமாக கண்டறிந்தால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.