ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 16ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2 படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், முதல் இரண்டு நாட்களிலேயே அவதார் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை, பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில அவதார் இரண்டாம் பாகம் 16ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 160 மொழிகளி வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 2009ல் வெளியான அவதார் முதல் பாகத்தின் வெற்றியை விடவும், இரண்டாம் பாகம் விஷுவலாக சூப்பர் ட்ரீட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவதார் 2 வெளியான இரண்டே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் அவதார் 2 வெளியாகியுள்ளது. இந்தியாவில் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக 20 கோடி ரூபாய் வசூலித்த அவதார் 2, இதுவரை மொத்தம் 42 கோடி வசூலித்துள்ளதாம். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே 22 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாம். மற்ற மாநிலங்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் வசூலில் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போன்ற ஹாலிவுட் படங்களின் சாதனையை அவதார் 2 முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் முதல் இரண்டு தினங்களில் 42 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ள அவதார் 2, முதல் வாரத்திலேயே 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் உலகம் முழுவதும் அவதார் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பிரமிக்க வைத்துள்ளது. அதன்படி அவதார் 2 படம் ஒட்டுமொத்தமாக 2200 கோடி ரூபாய் வசூலித்து லைப் டைம் செட்டில்மென்ட் கிடைத்துள்ளது. இந்த வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.