விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!

விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு திரைப்படத்தில் இருந்து மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Soul of Varisu என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சித்ரா பாடியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடல் வெளியாகியுள்ளது. சித்ரா குரலில் வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வாரிசு படத்தில் இருந்து முதலில் வெளியான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், இரண்டாவது சிங்கிளான ‘தீ தளபதி’ பாடலும் மாஸ் காட்டி வருகிறது. இப்போது மெலடியாக சோல் ஆஃப் வாரிசு வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மூன்று பாடல்களும் வெவ்வேறு சூழ்நிலையை பிரதிபலிப்பதால், வாரிசு திரைப்படம் கமர்சியலாக வித்தியாசமான அனுபவத்தை தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.