உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி.

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

இன்று காலை 147/5 என்று தொடங்கிய நியூசிலாந்து அணி மேலும் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களுக்குச் சுருண்டது.

வெற்றி இலக்கு 40 ரன்களுடன் களமிறங்கிய வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42/2 என்று அபார வெற்றி பெற்று முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றது.

17 போட்டிகள் தொடர்ச்சியாக உள்நாட்டில் வென்று வந்த நியூசிலாந்தின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.