உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்.
தனியார் டிவி உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும், ஐ.என்.எக்ஸ்., ‘மீடியா’வின் உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 2015ல் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். கடந்த 2020ல், பீட்டருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இந்திராணியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி, ஆறு ஆண்டுக்கு பின் நேற்று விடுவிக்கப்பட்டார்.