பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க அம்மாநில காங்கிரஸ் அரசு தவறிய சூழலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, பிரதமரின் கான்வாய் மறிக்கப்பட்டு போராட்ட காரர்கள் பிரதமர் வாகனத்தை நோக்கி அருகில் வந்தனர் இந்த சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பஞ்சாப்பில் நடைபெறவிருந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து டெல்லி திரும்பினார் பிரதமர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கொந்தளிப்பை உண்டாக்கிய சூழலில் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கே காங்கிரஸ் அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை எனில் எப்படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பிரதமர் வருகையை முன் கூட்டியே கசியவிட்டு பிரதமர் மீது தாக்குதல் அல்லது கொலை முயற்சி ஆகியவை நடைபெறு நேற்று முயற்சிகள் நடந்ததாகவும் ஆனால் இதனை முன் கூட்டியே கண்டறிந்த பிரதமரின் தனிப்பட்ட காவல் அமைப்பு பிரதமரை பாதுகாப்புடன் அழைத்து சென்றதாகவும் இது குறித்து விரைவில் விசாரணை அறிக்கை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று சில அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருக்கின்றன இன்று பிரதமர் தலைமையில் கேபினட் மீட்டிங் நடைபெற இருக்கிறது. இதனுடன் CCS மீட்டிங் கேபினட் கமிட்டி ஆன் செக்யூ ரிட்டி நடைபெற இருக்கிறது. அனைத்தும் மோடியின் பெரோஸ்பூர் பயணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குளறுபடிகளை பற்றியே விவாதிக்க இருக்கிறார்கள்.
பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சரியில்லை அதனால் பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்று கோருகிறார்கள் ஆனால் விரைவில் பஞ்சாப்பில் ஆட்சி கவிழும் என்றும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து தானாக ஆட்சியை இழக்கும் வாய்ப்பு ஓரிரு நாட்களில் உண்டாகும் என்று கூறப்படுகிறது. பிரதமரின் உயிர் மீது விலைவைத்து காங்கிரஸ் அரசியல் செய்வது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக முடியும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.