கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது. சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 4 நாள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.