வைகை அணையிலிருந்து, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக, வினாடிக்கு 2,000 கன அடி வீதம், ஆற்றின் வழியாக நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால், வைகை அணை நீர்மட்டம் 70.20 அடி வரை உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களில் உள்ள கண்மாய்களுக்கு, வைகை அணையில் இருந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று காலை 7:15 மணிக்கு அணையின் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட நீர் சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. பின், கீழ்ப்பகுதியில் உள்ள ஏழு மதகுகள், நுண்புனல் மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், வினாடிக்கு 2,000 கன அடி வீதம் ஆற்றில் தண்ணீர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக, ஜூன் 4ல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.