என் தந்தையை குறி வைக்க என் மீது தாக்குதல்: கார்த்தி சிதம்பரம்

என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர் என, கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், உண்மையான குற்றச்சாட்டு இல்லை. புலன் விசாரணை என்ற பெயரில், மன உளைச்சல் தரும் முயற்சி. என்னிடம், 27 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அப்போது, சி.பி.ஐ., என்ன கேள்விகள் கேட்டனர் என்பதை, அவர்கள் வெளியிடாமல் இருப்பது ஏன்? என்னிடம் நடக்கும் விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.

என் தந்தை சிதம்பரம் முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகின்றனர். இது, என் தந்தையை குறிவைக்க, மத்திய அரசு எடுக்கும் முயற்சி. காங்கிரசில் இருந்து கபில்சிபில் வெளியேறியது வருத்தமே; அவர் ஒரு சிந்தனையாளர். அவர் சுயேச்சையாகவே, தற்போது ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.