தமிழகத்தில் திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான்: எச்.ராஜா

தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் எச்.ராஜா நேற்று கூறியதாவது:-

தேர்தல் அறிக்கையில், டீசல் மீது 5 ரூபாய்; பெட்ரோல் மீது லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக தி.மு.க., தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஜூன் 30க்குள் தி.மு.க., பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். குறைக்காவிடில் ஜூன் 20ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம் இருப்போம்; ஜூன் 30ல் திருச்சியில் பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடத்தப்படும்.

தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து, ஓட்டுகளை பெறுவதற்கு பெயர் தான் திராவிட மாடல். தமிழகத்தில் பிரிவினைவாத திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான். தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டனர். தி.மு.க., ஒவ்வொரு துறையிலும் ஊழல் புரிந்து வருகிறது. இந்த ஊழல் அரசை விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.