முருகனுக்கு பரோல் வழங்க கோரிய, நளினியின் மனுவை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பரோலில் வெளியே வந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். இதே வழக்கில், வேலுார் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் மருத்துவ சிகிச்சைக்காக, ஆறு நாட்கள் அவசர விடுப்பாக கருதி பரோல் வழங்க வேண்டுமென நளினியும், அவரது தாய் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை எஸ்.பி., அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை எனக்கூறி, நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.
