காஷ்மீரில் 3 டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்!

காஷ்மீரில் ட்ரோன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்தனர்.

இந்திய எல்லை அருகே அமைந்துள்ள கனாஸக் பகுதியில் வானில் டிரோன் நடமாட்டத்தை கவனித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், அதன் மீது துப்பாக்கியால் சுட்டனர். கீழே விழுந்த 3 டிரோன்களில் பள்ளி குழந்தைகளின் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு பையை திறந்து பார்த்த போது, அதில் டிபன் பாக்ஸ் உள்ளே வெடி மருந்துகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவை வெவ்வேறு கால நேரம் குறிப்பிட்டு, வெடிக்கும்படியாக அந்த வெடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்த வெடிப் பொருட்களை திறந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று அழைத்தனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே காஷ்மீரில் 2 வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா அருகே 2 லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே போன்று சோப்வாரா அருகே பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.