இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கானப் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி லீசெஸ்டர்ஷைருக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று எடுக்கப்பட்ட ஆர்ஏடி பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது. அவர் தற்போது விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால், டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை அவர் 6 நாள்கள் தனிமையில் இருந்தால், இந்திய அணியை ஜாஸ்பிரித் பும்ரா அல்லது ரிஷப் பந்த் அணியை வழிநடத்துவார்கள். துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக இல்லாததால், தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் களமிறங்கவுள்ளார். தற்போது ரோஹித் சர்மாவும் இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பெரும் பின்னடைவை உண்டாக்கும்.