வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை கவனிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மண்டலம் 1-க்கு சென்னை வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் சரவணகுமார் ஜத்வாத், மண்டலம் 2-க்கு தமிழ்நாடு சாலை திட்டம்-2-ன் திட்ட இயக்குனர் பி.கணேசன், மண்டலம் 3-க்கு சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மண்டலம் 4-க்கு சர்வே துறை இயக்குனர் டாக்டர் டி.ஜி.வினய், மண்டலம் 5-க்கு மாநில மனித உரிமை ஆணைய செயலாளர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், மண்டலம் 6-க்கு கால்நடைத்துறை துணை செயலாளர் ரஞ்சீத் சிங், மண்டலம் 7-க்கு சிறுபான்மை நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், மண்டலம் 8-க்கு ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் எஸ்.பழனிசாமி, மண்டலம் 9-க்கு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் கே.ராஜாமணி, மண்டலம் 10-க்கு நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் எம்.விஜயலட்சுமி, மண்டலம் 11-க்கு பள்ளிக் கல்வி இணைச் செயலாளர் டி.மணிகண்டன், மண்டலம் 12-க்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.நந்தகோபால், மண்டலம் 13-க்கு சிப்காட் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலம் 14-க்கு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன், மண்டலம் 15-க்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கே.வீரராகவ ராவ் ஆகியோரை நியமித்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.