கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபாயில் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயப் போட்டி நடைபெறுகிறது. அதில் தனது அணியினருடன் கலந்துக் கொண்டுள்ளார் அஜித். அதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கு அஜித்தின் தீவிர ஆதரவளரான சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் சிவகார்த்திகேயன், “துபாயில் 24H சீரிஸை முன்னிட்டு அஜித் சாரை வாழ்த்துகிறேன். உங்களுடைய நிலையான ஆர்வமும், அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. இதிலும் நீங்கள் மிகப் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள், சார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியினை முடித்துவிட்டு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் அஜித். கார் பந்தய காலங்களில் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டியொன்றில் அஜித் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.