ஜெயிலர் – 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் – 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் – 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வரவில்லை. புத்தாண்டு அன்று அறிவிக்கப்படலாம் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தகவலும் இல்லை.

தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், அடுத்தது ’சூப்பர் சாகா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது, ஜெயிலர் – 2 அறிவிப்பு என்பது உறுதியானது. இந்த நிலையில், ஜெயிலர் – 2 அறிவிப்பு டீசர் ஜன. 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேரடியாக யூடியூப் மற்றும் சில திரைகளிலும் வெளியிட உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.