எனக்கு துபாயில் ஆண் குழந்தை இருக்கு: ஓவியா

நடிகை ஓவியா பேட்டி ஒன்றில் பேசும் போது தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு தனக்கு துபாயில் ஒரு குழந்தை இருக்கிறது என்று கல்யாண விஷயத்தில் தன்னுடைய முடிவு என்ன என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

நடிகை ஓவியாவிற்கு பிரபலமே தேவை இல்லை. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி கொண்டே இருக்கிறார். என்னதான் தன்னைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அதற்கெல்லாம் கூலாக பதிலடி கொடுக்கும் ஓவியா களவாணி, கலகலப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிரபலம் கிடைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பான முதல் சீசனில் ஓவியா கலந்து கொண்டார். இப்ப வரைக்கும் ஓவியாவிற்கு ஆர்மி அழைக்கும் வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். முதல் சீசனில் ஓவியா மற்றும் ஜூலிக்கு இடையே நடந்த சண்டைகள் பலரையும் வியக்க வைத்தது. அந்த நேரத்தில் அதிகமான இளைஞர்கள் ஓவியாவிற்க்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் கூட ஆபாச வீடியோ ஒன்று வைரல் ஆனது. அதில் இருந்தது ஓவியா என்று பலர் கூறி வந்த நிலையில் அதற்கு சற்றும் கவலைப்படாத ஓவியா அந்த பதிவுகளுக்கு கீழே லிங்க் கேட்டு கமெண்ட் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து பேசி இருக்கிறார். என்னை பற்றி சிலர் அடிக்கடி வதந்தி பரப்பி வருகிறார்கள். நான் அதிகமாக குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். நான் ஆரம்பத்தில் குடித்தேன் ஆனால் இப்போது அதை எல்லாம் விட்டுவிட்டேன். அது எனக்கு போர் அடித்து விட்டது. அதுபோல எனக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் எனக்கு துபாயில் ஒரு குழந்தை இருக்கிறது. அது ஒரு ஆண் நாய்க்குட்டி தான். அந்த நாய்க்குட்டியை கொஞ்சுவது விளையாடுவது அதை பேணி வளர்ப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இப்போ வரைக்கும் வந்ததில்லை. அதனால் நான் இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்று அந்த பேட்டியில் ஓவியா கூறியுள்ளார்.