தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள். தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார். தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.