சென்னையில் சொந்த மகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெற்றோர்!

சொந்த மகள் உட்பட பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து விற்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த வீடியோக்களை விற்ற மேலும் 2 பேரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு மூலம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டிற்கே போலீசார் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததுமே குப்பென சிறுமியின் பெற்றோருக்கு வியர்த்து கொட்டியுள்ளது.. “நாங்க எந்த தப்பும் பண்ணலயே” என்று இருவரும் போலீசாரிடம் பதறி சொன்னார்கள். ஆனால், ஒரு விசாரணைக்கு அந்த பகுதிக்கு வந்திருப்பதாக கூறி பேச்சை கொடுத்துள்ளனர் போலீசார். பிறகு, ஒரு போன் பேச வேண்டும் என்று சொல்லி, சிறுமியின் தந்தையின் செல்போனை சைஸாக கேட்டு பெற்றுள்ளனர்.. அப்போதுதான் செல்போன் கேலரியில் உள்ள ஆபாச வீடியோக்களை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. சொந்த மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து மற்றவர்களுக்கு விற்றதும் தெரிய வந்தது. பெற்ற மகள் உட்பட ஏராளமான சிறுமிகளின் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன..

நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த போலீசார், இதற்கு, அவரது மனைவியும் உடந்தையாக இருந்தது தெரிந்ததுமே, கொந்தளித்துபோய்விட்டார்கள். மகளின் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து விற்ற தம்பதியையும், சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களில் சிறுமியின் தாய்க்கு பணத்தாசை அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.. பெரிய பெரிய தொழிலதிபர்களிடம், தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைத்தாராம் இந்த தாய்.. 10ம் வகுப்பு படிக்கும் அந்த 15 வயது குழந்தை, தன்னுடைய அம்மாவிடம் இதற்கு மறுப்பு சொல்லி பலமுறை அழுதிருக்கிறாராம்.. தான் படிக்க ஆசைப்படுவதாகவும், இந்த காரியத்தை செய்ய துளியும் பிடிக்கவில்லை என்றும் சொல்லி கண்ணீர் விட்டாராம். எனினும் மனம் இரங்காத அந்த தாய், “படித்து சம்பாதிக்கிற பணத்தை, இதிலேயே எடுத்துவிடலாம். சீக்கிரமாக லைஃப்பில் செட்டில் ஆகிவிடலாம்” என்று மகளிடம் சொன்னாராம். ஆனால், அந்த பெரிய பெரிய தொழிலதிபர்கள் யாரென்று தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, “சிறுமியின் அம்மா, சில மாதங்களுக்கு முன்பு, ஸ்பா என்ற அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் இச்சைக்கு மகளை விருந்தாக்கியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல், அதை வீடியோவாக பதிவு செய்து பணத்திற்காகவும் விற்றும் வந்துள்ளார்’ என்கிறார்கள். மகளின் தோழிகள் யார் யார்? வீடியோக்களை எத்தனை பேருக்கு ஷேர் செய்திருக்கிறார்கள்? போன்ற விவரங்களை போலீசார் கையில் எடுத்துள்ளனர். மாணவிகளை வன்கொடுமை செய்தவர்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்தவர்களின் பட்டியலை தயார் செய்து, போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மயிலாப்பூர் தம்பதிகளின் இந்த செயல்களுக்கு பின்னால், வேறு யாராவது இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. எனவே, இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்கும் என்றும் தெரிகிறது.