தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்!

ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் ​போம் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் அறிவுறுத்தி உள்ளனர். விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்​கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்​ட​வட்​டமாக தெரி​வித்​தனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்​.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். அப்போ​திருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்​கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகிய​வற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

தமிழக அரசு தயாரித்து வழங்​கும் ஆளுநர் உரையை சட்டப்​பேர​வை​யில் வாசிக்​காமல், சில பகுதிகளை நீக்கி​யும், சேர்த்​தும் படித்து சர்ச்​சையை ஏற்படுத்​தினார். அவை நிகழ்ச்​சிகளில் பங்கேற்​காமல் வெளி​யேறினார். தமிழகத்​தில் அரசு நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்​பட்டு வரும்நிலை​யில், நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் பாட வேண்​டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதற்​கிடையே, சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்​டங்​களுக்கான அரசாணை​களுக்கு ஒப்புதல் அளிக்​காதது உள்ளிட்ட பிரச்​சினை​களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதேபோல, தமிழகத்​தில் உள்ள பல்கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்களை நியமிக்​கும் விவகாரம் தொடர்​பாக​வும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​துள்ளது. உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் ஜே.பி.பர்​திவாலா, ஆர்.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்​குகள் நேற்று விசா​ரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்: மத்திய அரசு தரப்​பில் ஆஜ ரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்​கடரமணி: ஆளுநருக்கு எதிரான வழக்​குகளை ஒரு வாரத்​துக்கு தள்ளிவைக்க வேண்​டும்.

நீதிப​தி​கள்: ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்​களில் தீர்வு காணப்​பட்​டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்​கிறதா? தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்கள் பி.வில்​சன், அபிஷேக் சிங்வி: ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு தொடர்​கதை​யாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதுகூட துணைவேந்​தர்கள் நியமனத்​தில் பிரச்​சினை எழுந்​துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்​களி​லும் ஆளுநர் தலையிடு​கிறார். இதில் உச்ச நீதி​மன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்​கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்​தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவை​யும் இந்த வழக்​குடன் சேர்த்து விசா​ரித்து, ஆளுநர் தரப்​பில் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டும். இவ்வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டியது இல்லை. இந்த வழக்​கோடு சேர்த்து விசா​ரிக்​கப்​படும். மேலும், ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்​டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்​போம்’’ என்று ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் அறிவுறுத்தி விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​தனர். அன்றைய தினம் இந்த வழக்​கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்​ட​வட்​டமாக தெரி​வித்​துள்ளனர்.

தமிழக அரசு – ஆளுநர் மோதல் போக்கு தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதி​மன்​றத்​தில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட் அமர்​வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘நிலுவை​யில் உள்ள மசோதாக்​களுக்கு ஒப்புதல் அளிப்​ப​தில் தமிழக முதல்​வருக்​கும், ஆளுநருக்​கும் இடையிலான பிரச்​சினை​யில் ஒவ்வொரு முறை​யும் உச்ச நீதி​மன்றம் தலையிட வேண்​டும் என ஆளுநர் எதிர்​பார்ப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்​பினார். ‘‘இரு​வருக்​கும் பரஸ்​பரம் சுமுக உறவு இருந்​தால்​தான் தீர்வு கிடைக்​கும். ஆளுநர் தரப்​பில் இருந்து சில முன்னேற்​றங்களை எதிர்​பார்க்​கிறோம். முதல்​வரும், ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்​சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்​டும்’’ என்று அறிவுறுத்​தினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்திக்க முதல்வர் தயாராக இருப்​பதாக தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஆளுநரும் ​முதல்​வருக்கு அழைப்பு ​விடுத்​தார். இதையடுத்து, ​முதல்​வர் ஸ்​டா​லின் மற்றும் துரை​முரு​கன் உள்​ளிட்ட அமைச்​சர்கள் ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்​.என்​.ர​வியை சந்​தித்​தது குறிப்​பிடத்​தக்​கது.