ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. SLV-3 E10 என்பதுதான் இதன் பெயர். இதில் ரோகினி டெக்னாலஜி பேலோட் வைத்து அனுப்பப்பட்டது. இந்தியாவின் முதல் விண்வெளி ராக்கெட் ‘SLV-3’-ன் செயல்திறனை கண்காணிக்க அனுப்பப்பட்டது. ஆனால் முதல் முயற்சி பாதிதான் வெற்றியடைந்தது. அதன் பிறகு இஸ்ரோவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவரான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் 1980 ஜூலை மாதம் 19ம் தேதி SLV-3E2 ராக்கெட் ஏவப்பட்டது. அந்த முயற்சி முழு வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு 2 SLV ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. பின்னர் 4 ASLV ராக்கெட்டுகள், 62 PSLV வகை ராக்கெட்டுகள், 16 GSLV வகை ராக்கெட்டுகள், 7 LMV3 ராக்கெட்டுகள், 3 SSLV ராக்கெட்டுகள், 1 RLV வகை ராக்கெட் இதுவரை ஏவப்பட்டிருக்கிறது. இவற்றில் , 2008ல் ஏவப்பட்ட சந்திரயான் -1 (PSLV-C11), 2019ல் ஏவப்பட்ட சந்திரயான் -2 (GSLV-Mk III – M1), 2023ல் ஏவப்பட்ட சந்திரயான்-3 (LVM3 M4/) ஆகியவை மிக முக்கியமான மிஷன்களாக இருக்கிறது.

சந்திரயான் மிஷன்களை தவிர, 2013ல் ஏவப்பட்ட செவ்வாய் ஆர்பிட் மிஷன் (PSLV-C25), சூரியனை ஆய்வு செய்ய 2023ல் அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 மிஷன் (PSLV-C57) ஆகியவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்பட்டிருக்கிறது. வெளி கிரகத்தை ஆய்வு செய்யவும், சூரியனை ஆய்வு செய்யவும் அனுப்பப்பட்ட முதல் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் சென்றிருக்கின்றன. மட்டுமல்லாது கடந்த 2017ம் ஆண்டு இங்கிருந்து இஸ்ரோ, 104 செயற்கைக்கோள்களை Cartosat-2 series மிஷனில் PSLV-C37 ராக்கெட்டில் அனுப்பியது. இதன் மூலம் 2021வரை, ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பியது இந்தியாதான் என்கிற பெருமையை தக்கவைத்திருந்தது. 2021க்கு பின்னர் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் 143 ராக்கெட்களை அனுப்பி இந்த சாதனையை முறியடித்தார்.

தோல்விகள் சில இருந்தாலும் வெற்றிகளைதான் ஸ்ரீஹரிகோட்டா அதிகம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் இந்த வெற்றி தொடர்கிறது.