விஷால் கூட கல்யாணம்ன்னு எல்லாம் செய்தி பரப்புறவங்க அவங்க வயித்து பொழப்புக்காக இப்படி பண்றாங்கன்னு கண்டுக்காம போயிடுவேன் என நடிகை அபிநயா கூறியிருக்கிறார்.
நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார். இவர், தனது சினிமா ஆசை, காதல், திருமணம், தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கலாட்டா மீடியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:-
நான் சின்ன வயசுல எல்லாம் சினிமாவுக்குள்ள வருவேன்னு நெனச்சு பாத்ததே இல்ல. அதுக்கு எல்லாம் நான் என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லணும். சின்ன வயசுல ஸ்கூல் லீவ் விட்டா அவரோட ஷூட்டிங் பாக்க போயிடுவோம். எங்க அண்ணனுக்கு அதெல்லாம் போர் அடிக்கும். ஆனா எனக்கு அப்படி இல்ல. முழு நாளும் உக்காந்து ஷூட்டிங் பாப்பேன். அப்போ தான் எனக்கு நடிப்புன்னா என்ன அவங்க என்ன பண்றாங்கன்னு பாத்து கத்துக்க ஆசை வந்தது. என்னோட டான்ஸ் டீச்சர் கூட என்ன என்கரேஜ் பண்ணுவாங்க.
பெங்களூருல துரூப் அப்டின்னு ஒரு நடிகர் இருக்காரு. அவர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர் நிறைய கத்து கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் நாடோடிகள் படத்துல வாய்ப்பு கிடைச்சது. இப்போது, இங்க வந்து நிக்குறேன். நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன். என்னோட சின்ன வயசு பிரண்ட் தான் என்னோட பாய் பிரண்ட். 15 வருஷமா இந்த உறவு தொடருது. அவரு என்னோட பிரண்ட். அதுனால அவர்கிட்ட எந்த விஷயமா இருந்தாலும் என்னால பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்டும் இருக்காது. நான் இன்னும் எங்களோட கல்யாணம் பத்தி பிளான் எதுவும் பண்ணல. அதுக்கெல்லாம் டைம் இருக்கு. நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கு.
டைரக்ஷன்ல இருக்கவங்க எப்படி ஒருவாய் பேச முடியாத பொன்னால இதெல்லாம் பண்ண முடியும்ன்னு என்ன ரொம்ப அசிங்கப்படுத்துவாங்க. ஆனா, எல்லாருக்கும் திறமை இருக்கு. இப்படி அசிங்கப்படுத்துறவங்க முன்னாடி எல்லாத்தையும் செஞ்சி காட்டி நிரூபிக்கனும்ன்னு நான் நடிப்பேன். எங்க அம்மா என்ன சந்தோஷமா வச்சிக்க 24 மணி நேரமும் என் பக்கத்துலயே இருந்தாங்க. அவங்களோட இருந்த 33 வருஷமும் என்னோட பெஸ்ட் மெமரிஸ் தான். அவங்க நான் இருந்தாலும் இல்லைன்னாலும் சுதந்திரமா இருக்கணும், எனக்கான ஆசையை நான் வளத்துக்கனும்ன்னு எல்லாம் சொல்லுவாங்க. எங்க அம்மா உடம்பு சரி இல்லாம, கஷ்டப்பட்டு எல்லாம் இறந்து போகாம ரொம்ப இயல்பா இறந்துட்டாங்க. இதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என்ன யாராவது ஐயோ பாவம்ன்னு பாத்தா எனக்கு பிடிக்காது. நானும் அவங்கள அப்படி தான் பாக்கணும், ஏன்னா அவங்களுக்கு நாங்க யூஸ் பண்ற சைன் லேன்குவேஜ் தெரியாது. என்கூட பேச உங்களுக்கு தான் தெரியலன்னு நான் நினைப்பேன்.
விஷால் ரொம்ப தங்கமான மனுஷன். அவரு ரொம்ப பாசிட்டிவ்வான ஆளு. என்கிட்ட சைன் லேங்குவேஜ் எல்லாம் கத்துக்கொடுக்க சொல்லுவாரு. நாங்க எல்லாம் ஒன்னா தான் உக்காந்து சாப்பிடுவோம். அவர் என்னோட க்ளோஸ் பிரண்ட். அவரு என்னோட மெமரி எப்போவும் இருப்பாரு. எங்கள சுத்தி வர்ற வதந்தி எல்லாம் ரொம்ப முட்டாள் தனமானது. விஷால் எனக்கு ப்ரபோஸ் பண்ணாரு. எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுதுன்னு வர்ற செய்தி எல்லாம் நம்பாதிங்க. அவங்க வயுத்துப் பொழப்புக்காக எதையாவது பேசுவாங்கன்னு நான் அதெல்லாம் கண்டுக்காம போயிடுவேன். என்னமோ சொல்லுங்க. நீங்க சந்தோஷமா இருந்தா ஓகே தான்னு நான் போயிடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.