ஜிவி பிரகாஷ் குமார் குரலில் வெளியானது கிங்ஸ்டன் பட பாடல்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி – 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இப்படத்துக்கு கிங்ஸ்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மீனவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் முதல் பாடலான ராசா ராசா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார், சுப்லக்‌ஷினி இணைந்து பாடியுள்ளனர்.