அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(பிப். 3) வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பிப். 6 படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்ற 121 நாள்களில், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் உள்பட படப்பிடிப்பு தளத்தில் பதிவு செய்த சில முக்கிய காட்சிகளை உள்ளடக்கிய விடியோ யூடியூப் தளத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.