முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசும்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் கேரவனில் தனக்கு நடந்த பிரச்சனையால் தான் பட்ட கஷ்டம் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகை தமன்னாவிற்கு தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமன்னா முதல்முறையாக தெலுங்கு படத்தில் முலமாக சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கல்லூரி படத்திலும் அவருடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார். அதை தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு ஹிட் கொடுத்தது. விஜய், சூர்யா, கார்த்தி உட்பட முன்னணி நடிகர்கள் பலரோடும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் “காவாலா” பாடலுக்கு நடனமாடியது இப்போதும் பலராலும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரண்மனை திரைப்படத்தில் பேயாகவும் மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில் ஹிந்தியில் ஸ்ட்ரீட் டு படத்தில் ஆர்ச் கீர் ராக் என்ற பாடலிலும் டான்ஸ் ஆடி இருந்தார். இந்த நிலையில் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசும் போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் கேரவனில் இருந்தபோது மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். நான் எதிர்பார்க்காத சம்பவத்தால் வேதனை அடைந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய கண்கள் குளமானது. அதே நேரத்தில் நான் சூட்டிங்கிற்கு தயாராகி மேக்கப் உடன் மஸ்காரா போட்டு இருந்ததால் அந்த சமயத்தில் என்னால் அழ கூட முடியவில்லை. அப்போது எந்த சூழ்நிலையிலும் நாம் மனம் தளரக்கூடாது என்று கண்ணாடியில் என்னை பார்த்து நானே சொல்லிக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள், தொந்தரவுகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தமன்னா தனக்கு கேரவனில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு எந்த படத்திற்கான சூட்டிங் போது தனக்கு இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது என்று தமன்னா குறிப்பிடவில்லையே அதையும் தெளிவாக சொன்னால்தான் நல்லது என்று பலரும் கூறி வருகிறார்கள்.