நடிகர் வடிவேலுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு!

நடிகர் வடிவேலுவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ‘வைகைப்புயல்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம் (Meme)உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.