‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே குமார்’ என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘பரசுராம்’ என்ற கேரக்டரில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர்.
வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.