தனக்கு ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் பல கிடைக்காமல் போக முக்கிய காரணம் என்ன என்பது குறித்தும் தனது பெற்றோர்களை அதன் பின்னர் எப்படி சம்மதிக்க வைத்தேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் மிருணாள் தாகூர்.
கடந்த 2014ம் ஆண்டு மராத்தியில் வெளியான ஹலோ நந்தன் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் சில படங்களில் நடித்து வந்த அவருக்கு பாலிவுட்டில் லவ் சோனியா, சூப்பர் 30 உள்ளிட்ட படங்கள் பல கதவுகளை திறந்தன. தென்னிந்தியாவில் குறிப்பாக டோலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் கிடைத்து பான் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவரது நடிப்பில் 5 படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
முத்தக் காட்சிகளிலும், ஆபாசமான காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தனது அம்மா, அப்பா கண்டிஷன் போட்ட நிலையில், பல பட வாய்ப்புகளை இழந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நடிகையாக வேண்டும் என்கிற தனது கனவு நிறைவேறாமல் போக இதுவே ஒரு காரணமாக அமைந்து விடுமோ என்கிற அச்சத்தில் என்னுடைய பெற்றோர்களை உட்கார வைத்து பேசி அவர்களுக்கு புரிய வைத்தேன். இதுதான் என்னுடைய வாழ்க்கை, சினிமாவில் நடிக்க மட்டும்தான் செய்கிறேன். முத்தக் காட்சிகளிலும் கவர்ச்சியான ரோல்களிலும் நடித்தால் தான் பெரிய நடிகையாக முடியும் என சொல்லி புரிய வைத்து போராடி சம்மதம் வாங்கிய பின்னர் தான் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக் கூறியுள்ளார்.
லவ் சோனியா படத்தில் படுக்கையறை காட்சிகளில் அத்துமீறி மிருணாள் தாகூர் நடித்திருப்பார். பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டிய பின்னர் தான் இதுபோன்ற காட்சிகளில் நடித்தாரா மிருணாள் தாகூர் என நெட்டிசன்கள் அவரது பேட்டியை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர். கோஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட இந்தி படங்களிலும் மிருணாள் தாகூர் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி நடித்திருப்பார். சீதா ராமம் படம் தான் அவருக்கு சிறப்பான நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் அப்படியான காட்சிகள் இல்லையே என்றும் கூறி வருகின்றனர். ஆனால், சினிமா உலகில் நடிகைகள் முத்தக் காட்சிகளுக்கும் ஆபாச காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவித்தால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும். இல்லையென்றால் மற்ற நடிகைகளை புக் செய்து விடுவார்கள் என்கிற யதார்த்தத்தை மிருணாள் தாகூர் தனது பேட்டி மூலம் போட்டு உடைத்துள்ளார்.