பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்: சீமான்!

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும் என்று சீமான் கூறினார்.

திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக சீமான் கூறியதாவது:-

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்து கொண்டேன். வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை. இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை. எங்க தாத்தா பெருந்தலைவர் காமராஜரோ, பேரறிஞர் அண்ணா போன்றோர்களே இதுபோல் வியூகம் வகுக்கவில்லை.

என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும். யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று இது கூட தெரியாமல் நான் எப்படி.. எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை. அதற்கு வியூகம் வகுத்து என்ன பயன்.

கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி, விதை விதைத்து, செடியை வளர்த்து, உரம் வைத்து, வளர்த்து விளைய வைக்க வேண்டும். அப்போது தான் கத்தரிக்காய் கிடைக்கும். குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்.

பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். நாம் இதையெல்லாம் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.