மலையாள பட நடிகை மமிதா பைஜூ பிரேமலு படத்தின் மூலம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனார். அப்படத்தில் அவரது நடிப்பு மற்றும் குறும்புத்தனங்களும் பெரிதளவில் பேசப்பட்டன. பிரேமலு படத்தின் மூலம் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜயுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் அவர், விஜய் சாரை பார்த்ததும் பதற்றம் அடைந்துவிட்டேன், என் கைகள் நடுங்கின என்று பூரிப்புடன் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கும் நடிகர் விஜய் 69 படத்தில் நடிக்கை மமிதா பைஜூ ஒப்பந்தமானார். படத்தின் பூஜையின் போது விஜயுடன் சேர்ந்து மமிதா பைஜூ எடுத்துக்காெண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. துறுதுறுவென இருக்கும் நடிகை மமிதா பைஜூ விஜய்யை பார்த்து பயந்ததாக தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பட புரோமோ நிகழ்ச்சி அல்லது கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளும் நடிகை மமிதா பைஜூ துள்ளலான நடனம், அல்லது ரசிகர்களை கவரும் வகையில் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியே இருக்கும். ஜனநாயகன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்து வருகிறார். விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் படமாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அண்மையில் நடிகை மமீதா பைஜூ அளித்த பேட்டியில், விஜய் சாரை நேரில் பார்த்ததும் பதற்றமடைந்தேன். அவரை பார்த்து ஹாய் சார் என்று மட்டுமே கூறினேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை, கைகள் நடுக்கத்துடன் இருந்தது. இதை தெரிந்து கொண்ட விஜய் சார், என் அருகில் வந்து மெதுவாக ஹாய் மா எனக் கூறி கை கொடுத்து அரவணைத்து கொண்டார். அந்த நிமிடங்களை என்னால் மறக்க முடியவில்லை. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விஜய் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என பூரிப்புடன் தெரிவித்தார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ ஆகியோர் நடித்து வருகின்றனர்.