தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14-ம் தேதி 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக்கட்ட கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வரும் மார்ச் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டப்படுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.
அதைத்தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-25ம் ஆண்டின் கூடுதல் செலவீனங்களுக்கான மானியக் கோரிக்கைகள் ஆகியவை வரும் மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.