அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ரசிகையாக அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஹன்சிகா
கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷ் உடன் ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஹன்சிகா கடைசியாக ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸை நினைத்து பெருமைப்படுவதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸை நினைத்து ஒரு ரசிகையாக பெருமைப்படுகிறேன். எனது கெரியரின் ஆரம்பத்திலேயே இருவருடனும் பணியாற்றியுள்ளேன். அவர்களின் படங்கள் மொழித் தடைகளை அகற்றி இருக்கின்றன. அவர்கள் தற்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்தபோதும் பணிவாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘தேசமுதுரு’ திரைப்படத்தின் மூலம் ஹன்சிகா தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின்னர், 2009-ம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘பில்லா’ படத்தில் ஹன்சிகா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.