‘இரண்டு நாளைக்கு முன்னாடி கூட, நீங்க சமாதானத்துக்கு ஆட்களை அனுப்பிவிட்டுட்டு, இன்னைக்கு அப்படியே ப்ரஸ்கிட்ட வந்து, ‘அந்த பொம்பள அப்படி, இப்படி,’ அப்படினு பேசி, இன்னைக்கு கூட துரோகம் பண்றீங்களா? என் பாவம் உங்களை சும்மா விடாது சீமான் அவர்களே’ என்று விஜயலட்சுமி புது வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று சீமானின் செய்தியாளர் சந்திப்பில், விஜயலட்சுமி குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை கடுமையாக சாடியதுடன், சாபமும் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:-
இன்னைக்கு மீண்டும் ப்ரஸ் மீட்ல விஜயலக்ஷ்மியை திமுக கூட்டிட்டு வந்துருக்காங்க. என் மேல வழக்கு குடுக்கறதுக்கு அப்டின்னு சொல்லி இருக்கார். சீமான் அவர்களே முதல்ல சொன்னீங்க, எனக்கு லட்சுமி யாருனே தெரியாது அப்டினு சொன்னீங்க. அவங்கள காங்கிரஸ்காரங்க கூட்டிட்டு வந்துருக்காங்க அப்டின்னு சொன்னீங்க. அடுத்து நான் வந்து வழக்குகளை கொடுத்த போது அவங்க வந்து பாரதிய ஜனதா இயக்கிட்டு இருக்காங்க அப்டின்னு சொன்னீங்க. இப்போ 2023 ல ஒரு பேச்சுவார்த்தைக்கு என்கிட்ட வந்திங்க இல்லையா, அதுல வந்து, நான் மாச மாசம் 50 ஆயிரம் கொடுத்துறேன், என்ன பத்தி எங்கயும் பேசாத அப்டின்னு சொல்லிட்டு, மாசம் மாசம் 50 ஆயிரம் போட்டிங்க, என்கிட்ட வீடியோ எல்லாம் வாங்குனீங்க.
அப்பறம் மதுரை செல்வம், ‘உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுறதுக்கு யார்கிட்டக்கா கேக்கணும்’ அப்படின்ற வாக்குமூலம் குடுத்தார். அப்புறம் உங்க பொன்னான வாயிலிருந்து தான, ‘பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி’ அப்படினு வீடியோல பேசுனீங்க. அந்த வீடியோஸ் எல்லாம் வந்து காவல்துறைக்குக் கொடுத்து, காவல்துறை எடுத்துட்டு போய் நீதிமன்றத்துல கொடுத்து, அதை எல்லாம் பாத்து தான், ‘அவங்க விஜயலட்சுமி உங்களோட முதல் மனைவியா?’ அப்படினு கேட்டிருக்காங்க.
இப்போ, அந்த பொம்பளய கொஞ்ச நேர்ல வரச் சொல்லுங்க, நான் உட்காந்து பேசுறேன்னு சொல்றீங்க. நான் காத்திருக்கேன் சீமான் அவர்களே, உங்கள நேர்ல பாத்து ‘என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது’ அப்டின்னு கேக்கணும்னு நான் காத்துட்டு தான் இருக்கேன். கொஞ்சம் காவல்துறை கிட்ட சொல்லுங்க, உடனே அதுக்கு அரேஞ்ச் பண்ணிடுவாங்க. ஏமாத்தாதீங்க சீமான் அவர்களே. என்னோட பாவத்தை கட்டிக்காதீங்க.
இரண்டு நாளைக்கு முன்னாடி கூட, நீங்க சமாதானத்துக்கு ஆட்களை அனுப்பிவிட்டுட்டு, இன்னைக்கு அப்படியே ப்ரஸ்கிட்ட வந்து, ‘அந்த பொம்பள அப்படி, இப்படி,’ அப்படினு பேசி, இன்னைக்கு கூட துரோகம் பண்றீங்களா? அதான் நான் சொல்லிட்டே இருக்கேனே.. என் பாவம்.. உங்களை சும்மாவே விடாது. இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியுள்ளார்.