கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
கர்நாடகத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் எடியூரப்பா ஆவார். இவரை கடந்த 2024ம் ஆண்டு சிறுமியுடன் பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து சந்தித்துள்ளார். அப்போது எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது எடியூரப்பா, அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாய் தரப்பில் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே இந்த வழக்கு சிஐடி வசம் சென்றது. மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே தான் புகார் அளித்த சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக போச்கோ வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி எடியூரப்பாவின் ஆதரவாளர்கள், சிறுமி குடும்பத்தை நாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு முதன்மை நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவால் தற்போது எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், வருகிற மார்ச் 15ந் தேதி அடுத்த விசாரணையை நடத்த உள்ளதாகவும், அப்போது எடியூரப்பா நேரில் ஆஜராகவும் கூறி உள்ளது.
ஏற்கனவே எடியூரப்பாவு வழக்கில் சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டனா். இந்த நிலையில் தற்போது எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே போக்சோ வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க எடியூரப்பா தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் பெறப்பட்டுள்ளது. ஒரு முறை எடியூரப்பாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனா். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.