சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்: நடிகர் விஷால்!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷயல் பேசியதாவது:-

மொழி திணிப்பு என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதை கொண்டு வரமுடியாது. மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.

தமிழகம், புதுச்சேரியில் +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். நன்றாக படியுங்கள். நன்றாக தூங்குங்கள். படிப்பில் எந்த சந்தேகமாக இருந்தாலும் உங்கள் நண்பர்களுக்குள்ளேயே கேட்டு தெளிவு பெறுங்கள்.

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம். இவ்வாறு விஷால் கூறினார்.