தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டார்கள். திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் காதல் முறிவு செய்தி அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்தொடரில் நடித்தபோது தமன்னாவுக்கும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் அவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி வைரலானது. அதன் பிறகு விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலை உறுதி செய்யாமல் இருந்து வந்தார்கள். இருப்பினும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களின் வீட்டு பார்ட்டிகளுக்கு சென்றார்கள். இது காதலா இல்லையா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலை ஒப்புக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வீட்டில் பிரஷர் கொடுப்பதாக தெரிவித்தார் விஜய் வர்மா. அவர் வீட்டில் மட்டும் அல்ல தமன்னா வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். இந்த ஆண்டே விஜய் வர்மா, தமன்னாவின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும், தமன்னாவும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் திருமண தேதி அல்ல பிரேக்கப் தகவல் தான் கிடைத்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டார்களாம். இதை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்திருக்கிறார். காதல் முறிந்துவிட்டாலும் இனி நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்திருக்கிறார்களாம். விஜய் வர்மாவும், தமன்னாவும் பிரிந்துவிட்டதற்கான காரணம் தெரியவில்லை. தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாதவர்கள் அவர்கள். அதனால் பிரேக்கப்பிற்கான காரணம் வெளியாக வாய்ப்பு இல்லை.
தமன்னாவுக்கு திருமணம் நடக்கும், ஜூனியர் விஜய் அல்லது ஜூனியர் தம்மு வருவார் என எதிர்பார்த்தோமே. இப்படி பிரேக்கப் ஆகிடுச்சே என தமன்னாவின் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் வர்மாவை காதலிக்கத் துவங்கிய பிறகே தமன்னாவின் முகத்தில் கூடுதல் சந்தோஷம் வந்தது. தற்போது அது போய்விடுமே என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜய் வர்மா என்னை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். என்னை மாற்ற அவர் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட நபர் என் வாழ்வில் வந்ததில் சந்தோஷமாக இருக்கிறது என முன்பு தெரிவித்தார் தமன்னா. அப்படி தன்னை நன்கு புரிந்து வைத்த விஜய் வர்மாவை ஏன் பிரிந்தார் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.